முதலாம் தியோனீசியசு (அண். கி.மு. 432–367 ) என்பவர் பண்டைய கிரேக்க சர்வாதிகாரி ஆவார். இவர் சிசிலியில் உள்ள சிரக்கூசாவின் ஆட்சியாளராக இருந்தார். மேற்குக் கிரேக்கக் குடியேற்றங்களில் சிரக்கூசா நகர அரசை மிகவும் சக்திவாய்ந்த ஒன்றாகச் சிசிலியிலிருந்து இத்தாலி வரை பரவிய பேரரசாக மாற்றினார். இந்தப் பேரரசு பெயரளவில் ஓர் அரசியலமைப்புள்ள குடியரசாக இருந்தாலும், உண்மையில் இது முடியாட்சியாக இருந்த முதல் கிரேக்கப் பேரரசாகும். இதில் தியோனீசியஸ் பேரரசர் அலெக்சாந்தருக்கும்அகஸ்டசின் சாதனைகளுக்கும் முன்மாதிரியாக இருந்தார். இவர் தனது வாழ்நாளில் தெய்வீக மரியாதைகளைப் பெற்ற முதல் கிரேக்க ஆட்சியாளர்களில் ஒருவராக இருந்து பிற்கால ஆட்சியாளர்களுக்கு ஒரு தவறான முன்னுதாரணமாக இருந்தார். இவர் மிக மோசமான, கொடூரமான, பழிவாங்கும் சர்வாதிகாரிகளுக்கு ஓர் எடுத்துக்காட்டாகப் பழங்காலத்தில் கருதப்பட்டார். மேலும்...
பெருந்தோற்றத்திற்கான முக்கியமான காரணம், மூளையில் உள்ள “கபச் சுரப்பி” எனப்படும் சுரப்பி அதிக அளவில் வளர்ச்சி இயக்குநீரைச் சுரப்பது ஆகும்.
அரச பயங்கரவாதம் எனும் சொல் ஒரு அரசாங்கம் தமது நாட்டில் தமது மக்கள் மீதே கட்டவிழ்த்துவிடும் பயங்கரவாத நடவடிக்கைகளைக் குறிக்கும்.
போகர் என்பவர் பதினெண் சித்தர்களுள் தனிச் சிறப்புவாய்ந்த சித்தராகவும், இரசவாதியாகவும், மெய்யியலாளராகவும் அறியப்படுகிறார். இவரது காலம் கிமு 500-கிமு 100 ஆகும். தமிழிலும், சீன மொழியிலும் பல நூல்களை இயற்றியுள்ளார்.
தானியங்கி எழுதுகோல் ஒரு மனிதரின் கையொப்பத்தை நகலெடுத்து இடுவதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு இயந்திரம். 1930களில் இது உருவாக்கப்பட்டது.
நீச்சல்காரன், மதுரையைச் சேர்ந்த இயற்பியல் பட்டதாரி. 2010 முதல் விக்கிப்பீடியாவில் தமிழ், ஆங்கிலம், இந்தி முதலிய மொழிகளில் பங்களித்துவருகிறார். இதுவரை தமிழில் 174 புதிய கட்டுரைகளைத் தொடங்கியுள்ளார். வார்ப்புருக்களின் ஆக்கத்திலும், மொழிபெயர்ப்பிலும் அவ்வப்போது பங்களித்துள்ளார். தமிழ்க் கணிமையில் ஆர்வமுடைய இவர் சந்திப்பிழை திருத்தி, சொற்பிழை திருத்தி முதலிய கருவிகளை உருவாக்கி உள்ளார். விக்கித் திட்டங்களுக்கான பல்வேறு கருவிகளையும், ஜாவாஸ்கிரிப்ட் நிரல்களையும் உருவாக்கியுள்ளார். சில துப்புரவுப் பணிகள் செய்யவும், புள்ளிவிவரங்கள் சேகரிக்கவும் இவரின் தானியங்கி பயன்படுகிறது.
பசிபிக் கடற்பறவை லாரிடே என்ற கடல் புறா குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பறவையாகும். இது ஆத்திரேலியாவின் கடற்கரைகளைப் பூர்வீகமாகக் கொண்டது. மேற்கில் மேற்கு ஆத்திரேலியா, கார்னவோனுக்கும், கிழக்கில் சிட்னிக்கும் இடையிலான கடற்கரையோரப் பகுதியிலும், தசுமேனியா மற்றும் தெற்கே உள்ள பிற தீவுகளிலும் இது மிதமான அளவில் காணப்படுகிறது. இவை 58 முதல் 66 சென்டிமீட்டர் (23 முதல் 26 அங்குலம்) வரை நீளமும், 137 முதல் 157 சென்டிமீட்டர் (54 முதல் 62 அங்குலம்) வரை இறக்கை விரிவும் கொண்டவை. இதன் உணவில் மீன்கள், நண்டுகள், மணல் தட்டைமீன்கள், தலைக்காலிகள் போன்ற முதுகெலும்பற்ற உயிரினங்கள் அடங்கும். இந்தப் பசிபிக் கடற்பறவை, தசுமேனியாவில் உள்ள மோல்டிங் கடற்காயலில் புகைப்படம் எடுக்கப்பட்டது.
இந்த விக்கிப்பீடியா தமிழில் எழுதப்பட்டுள்ளது. 2003-இல் தொடங்கப்பட்டது, தற்போது 1,83,332 கட்டுரைகள் உள்ளன. மேலும் பல விக்கிப்பீடியாக்கள் உள்ளன; அவற்றுள் மிகப்பெரியன கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.